
தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டாவது கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள், நாள்தோறும் ஒவ்வொரு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரை நிர்வாண போராட்டம், பாம்புகறி - எலிக்கறி திண்ணுதல், பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் என பலவிதமான போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஆனாலும், தங்கள் போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கவில்லை. எனவே ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்‘ற 76-வது நாளாக போராட்டத்தின்போது, தமிழக விவசாயிகள் தங்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட விவசாயிகள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.