
வங்கிக் கணக்கில், மினிமம் பேலன்ஸ் …. மக்கள் எதிர்ப்பால் அபராதம் விதிக்கும் திட்டத்தை கைவிட எஸ்.பி.ஐ. முடிவு…
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்த அளவு தொகையை வைத்திருக்க வேண்டும் என்றும் ,இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்ற திட்டத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ரத்து செய்தது.
இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக, எஸ்.பி.ஐ., கடந்த வாரம் அறிவித்தது.
அதில் பெருநகரங்களில் குறைந்த பட்சமாக வாடிக்கையாளர்கள் 5000 ரூபாயும் நகரங்களில் 3000 ரூபாயும்,, புறநகர் பகுதிகளில் 2000 ரூபாயும், கிராமப் புறங்களில் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச இருப்பாக தங்கள் சேமிப்புக் கணக்கில் பராமரிக்க வேண்டும் என எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது,
இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏராளமான வாடிக்கையயாளர்கள் எஸ்.பி.ஐ ல் உள்ள தங்கள் வங்கிக் கணக்கை குளோஸ் பண்ண தொடங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெறுமாறு, எஸ்.பி.ஐ.,க்கு, மத்திய அரசு உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை மறுத்துள்ள, எஸ்.பி.ஐ., தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா,மத்திய அரசிடம் இருந்து, அதிகார பூர்வ தகவல் ஏதும் வரவில்லை; அப்படி வந்தால், அது குறித்து வங்கி பரிசீலிக்கும்' என, தெரிவித்துள்ளார்.
எனவே பொது மக்களின் கடும் எதிர்ப்பால் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.