
இந்தியா -சீனாவின் எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் சீனாவின் ஊடுறுவல்களை தடுக்கும் வகையில் அங்கு ஒட்டகம் மூலம் காண்காணிப்பு பணியை மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக முதல்கட்டமாக ஒரு திமில் கொண்ட ஒட்டகம், 2தமில்கள் கொண்ட ஒட்டகம்(பாக்டிரியன்) ஆகியவற்றையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா எல்லையில் சிக்கம்-திபெத்-பூடான் ஆகியபகுதிகள் சந்திக்கும் பகுதி மிகவும் பதற்றமானவையாக கருதப்படுகிறது. சமீபத்தில் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் அத்துமீறி நுழைந்து ஆக்கிமிரத்ததால் இந்தியவுக்கும், சீனாவுக்கும் இடையை சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின் இந்தியா, சீனா அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுக்கு பின் பதற்றம் தணிந்தது.
இந்நிலையில், பதற்றம் நிறைந்த சிக்கம்-திபெத்-பூடான் அருகே அமைந்த லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவின் ஊடுறுவலை தீவிரமாகக் கண்காணிக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒரு திமில், இரு திமில் கொண்ட ஒட்டகங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வகை ஒட்டகங்கள் மலைப்பகுதியில் ஆயுதங்கள், பொருட்களை 180 முதல் 220 கி.லோ வரை எளிதாக சுமந்து செல்லும் தன்மை கொண்டவை.
மணிக்கு 10 கி.மீ தூரத்தையும எளிதாகக் கடக்கும். இந்த இரு திமில் கொண்ட ஒட்டகங்கள் லடாக்கின் நுபுரா பள்ளத்தாக்கு பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. ஏற்கனவே பிகானிர் பகுதியில் ஒட்டகங்கள் கண்காணிப்பில் பயன்படுத்தப்பட்டாலும், லடாக்பகுதியில் பயன்படுத்தப்படவில்லை.
இந்த சோதணை முயற்சி வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் ஒரு திமில், இரு திமில் கொண்ட ஒட்டகங்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும். 12 ஆயிரம் அடி முதல் 15 ஆயிரத்து 500 அடி உயர எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இந்த ஒட்டகங்கள் ஈடுபடுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகளை இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடங்கிவிட்டது.