சத்தீஸ்கரில் ஏற்கெனவே போலி சாதிச் சான்றிதழ் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. ஆனால், இதுபோன்ற நிர்வாணப் போராட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
சத்தீஸ்கர் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில், அரசுப் பணிகளில் போலி சாதிச் சான்றிதழ் பிரச்சினையை கவனத்தில் கொள்ள வலியுறுத்தி இளைஞர்கள் ஆடையின்றி வீதிகளில் இறங்கி நிர்வாண போராட்டம் நடத்தியுள்ளனர். போலி சாதிச் சான்றிதழ்கள் வைத்துள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே இருக்கும் சூழலில் அதற்காக இதுபோன்ற போராட்டம் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைகளில் பதாகைகளை ஏந்திய நிலையில், உடலில் ஆடை ஏதுமின்றி வீதியில் நடந்து செல்வதைக் காணமுடிந்தது. போலி சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தி வேலை வாங்கித் தருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி ஆசை இல்லை! பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் ஹெல்லைட்ஸ்!
छत्तीसगढ़ में आज विधानसभा सत्र शुरु हुआ है.
जब VVIP विधानसभा जा रहे थे, उसी समय दर्जन भर नौजवान पूरी तरह से नग्न हो कर सड़कों पर आ गए.
इन नौजवानों की माँग थी कि फ़र्ज़ी आरक्षण प्रमाण पत्र के आधार पर नौकरी कर रहे लोगों पर कार्रवाई की जाए. pic.twitter.com/e9gr8GuyXI
சாலையில் விவிஐபி வாகனங்களை செல்லும் நேரத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களைக் கவனித்தை ஈர்க்கும் நோக்கில் கண்ட இளைஞர்கள் இளைஞர்கள் நிர்வாணமாகப் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சட்டசபைக்கு செல்லும் வாகனங்களை பதாகைகளுடன் பின்தொடர்ந்து ஓடும் காட்சியையும் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில் காணமுடிகிறது.
சத்தீஸ்கரில் அரசு வேலை பெறுவதற்காக போலி சாதி சான்றிதழ் வழங்கிய விவகாரம் கடந்த சில நாட்களாக அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டில், போலியான பட்டியல் பழங்குடியினர் சாதிச் சான்றிதழைப் பயன்படுத்திய பணியில் சேர்ந்த பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அரசு வேலை பெற விண்ணப்பதாரர்கள் போலி சாதிச் சான்றிதழை பயன்படுத்துவதாக இதுபோன்ற பல வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். போலி சாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் தகுதியில்லாமல் வேலையில் சேர்ந்தவர்கள் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள், ஆனால் மாநில தேர்வாணையம் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது என்று அவர்கள் முறையிடுகின்றனர்.
பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு ‘INDIA' என பெயரிட்டது ஏன்? எதிர்க்கட்சிகள் விளக்கம்..