உ.பி.யில் சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி எதிரொலி... மாயாவதி எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Mar 12, 2022, 1:04 PM IST
Highlights

நடந்து முடிந்த உத்தர பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடம் மட்டுமே பெற்றதற்கு ஊடகங்கள் தமது கட்சியை பாஜகவின் பி டீம் என்று பிரச்சாரம் செய்ததே காரணம். ஆகையால், பகுஜன் சமாஜ் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது என்று மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என மாயாவதி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி

உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜக பெருபான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.  பாஜக கூட்டணி 274 தொகுதிகளில், சமாஜ்வாதி கட்சி 111 இடங்களிலும்,  அதன் கூட்டணி கட்சிகளான ராஷ்டிரிய லோக் தளம் 8, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 2 இடங்களும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடமும் மட்டுமே கிடைத்தன. 

இதையும் படிங்க;- உ.பியில் பாஜகவின் வெற்றிக்குப் பாடுபட்ட மாயாவதி, ஒவைசிக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா விருது: சிவசேனா விளாசல்

மாயாவதி படுதோல்வி

இதனையடுத்து, உத்தரப்பிரதேச்தில் 36 ஆண்டுகளாக இருந்த வரலாற்றை உடைத்து, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றுகிறது பாஜக. முதல்வராக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த உத்தர பிரதேச தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடம் மட்டுமே பெற்றதற்கு ஊடகங்கள் தமது கட்சியை பாஜகவின் பி டீம் என்று பிரச்சாரம் செய்ததே காரணம். ஆகையால், பகுஜன் சமாஜ் இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது என்று மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இனி ஊடக விவாதங்களில் பங்கேற்காது

இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பேத்கர் கொள்கை வழியில் நிற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் செயல்பட்டன. சாதிய ரீதியான வெற்றுப்பினால் ஊடக முதலாளிகள் மேற்கொண்ட வேலை யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். இனிமேல் பகுஜன் சமாஜ் கட்சி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காது என்று பதிவிட்டுள்ளார்.

click me!