CBSE Result : வெளியானது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது ?

Published : Mar 12, 2022, 09:31 AM IST
CBSE Result : வெளியானது சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்.. எப்படி பார்ப்பது ?

சுருக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE), பருவம் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் வாரியத் தேர்வு மதிப்பெண்களை சரிபார்க்க முடியும். 

ஊடக அறிக்கைகள் குழு முடிவை வெளியிடுவதற்கான செயல்முறையை கிட்டத்தட்ட முடித்துவிட்டதால், தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். இருப்பினும், சிபிஎஸ்இ முதல் பருவ முடிவை வெளியிடும் தேதி மற்றும் நேரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சுமார் 32 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வது பருவம் 1 முடிவுக்காக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் முடிவு  வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால், டைம்ஸ் ஆஃப் இந்தியா உடனான அதிகாரிகளின் சமீபத்திய உரையாடலில், கூடியவிரைவில் CBSE முடிவை வெளியிடும் என்று அதிகாரி தெரிவித்தனர். 

சிபிஎஸ்இ எந்த ஒரு மாணவரையும் பாஸ், கம்பார்ட்மென்ட் மற்றும் ரிபீட் பிரிவில் டெர்ம் 1ல் சேர்க்காது. இதில் மாணவர்களின் பாட வாரியான மதிப்பெண்கள் மட்டுமே அறிவிக்கப்படும். இந்நிலையில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (முதல் பருவம்) சற்றுமுன் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை அவர்கள் படித்த பள்ளிகளில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!