காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் இன்று விலகியதற்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் விலகியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் இன்று விலகியதற்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் விலகியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கட்சியின் அனைத்துப் பொறுப்புகள், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். இது தொடர்பாக 5 பக்க கடிதத்தையும் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பி வைத்தார்.
ugc: fake 21 universities: கவனம் மாணவர்களே! போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்: யுஜிசி வெளியீடு
சோனியா காந்தியின் மருத்துவ சிகிச்சைக்காக அவருடன் ராகுல் காந்தி, பிரியங்க காந்தி இருவரும் உடன் சென்றுள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் இந்த முடிவை எடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஏற்கெனவே கபில் சிபல், அஸ்வினி குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விலகியநிலையில் குலாம் நபி ஆசாத் விலகியது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய இழப்பையும், பின்னடைவையும் தரும்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகியதற்கு காரணங்கள் குறித்து குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் ராகுல் காந்தியால்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம்எல்ஏ பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம்… அறிவித்தது தேர்தல் ஆணையம்!!
அதுமட்டுமல்லாமல் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீர் சென்று அங்கு தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் இந்தியா டுடே இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் துணை தலைவருமான ஜிஎம் சரூரி, காங்கிரஸ் மாநில துணைத் த லைவர் ஹாஜி அப்துல் ரசீத், இளைஞர் பிரிவு தலைவர் முகமது அமின் பாட், ஆனந்த்காக் மாவட்ட தலைவர் குல்சார் அகமது வானி, சவுத்ரி முகமது அக்ரம் ஆகியோர் தங்கள் பதிவியிலிருந்து விலகுவதாக கடிதம் வழங்கியுள்ளனர்.