இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள்... விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!!

By Narendran S  |  First Published Aug 26, 2022, 5:20 PM IST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 10 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 10 ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 ஆம் தேதி கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் நாகை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த காமராஜ், பூவரசன், அன்பு, அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்லையன், பாலு, செல்லதுரை, முருகானந்தம், ஸ்டீபன், முருகன் ஆகிய 9 பேரையும் கைது செய்து, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: இறுதி சடங்கில் உயிரோடு எழுந்து வந்த சிறுமி.. உறவினர்களுக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

Latest Videos

undefined

கைதான மீனவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், கடந்த 22 ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியிலிருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் மேலும் சில நகரங்களில் விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம்… அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம்!!

மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

click me!