மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த பிப்.26 ஆம் தேதி கைது செய்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மார்ச்.20 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: காரில் உள்ள பட்டன்களின் பயன் இதுதானா? சிரிக்க வைக்கும் இளைஞர்களின் விளக்கம்... வைரல் வீடியோ
இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மணீஷ் சிசோடியா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பெற்றோரின் திட்டுக்கு பயம்... கையை பிளேடால் கீறி போலி பாலியல் புகார் கூறிய சிறுமி!
முன்னதாக சிபிஐ காவல் கடந்த 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அவரை அதிகாரிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில் மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.