மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!

Published : Jun 14, 2023, 12:18 PM ISTUpdated : Jun 14, 2023, 12:24 PM IST
மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 9 பேர் உயிரிழப்பு; விடுப்பில் இருக்கும் போலீசாருக்கு அழைப்பு!

சுருக்கம்

மணிப்பூர் மாநிலம் காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் குறைந்தது 9 பேர் இறந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், விடுப்பிலர் போன காவல்துறையினர் உடனே பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரின் காமன்லோக் பகுதியில் நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம், மேலும் பலர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி காங்போக்பி மற்றும் இம்பால் இடையே எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

நள்ளிரவு நடந்த வன்முறையில் சுமார் 9 பேர் இறந்துள்ளனர் எனவும் மேலும் 5 பேர் காயமடைந்தனர் எனவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. காயமடைந்தவர்கள் RIIMS மற்றும் ராஜ் மெடிசிட்டி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பேரிடர்களில் ஒரு உயிர்கூட போகக் கூடாது... ரூ.8,000 கோடி நிதியை ஒதுக்கி அமித் ஷா பேச்சு

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இம்பால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிள்ளது. சாந்திபூர், கோபிபங், காமென்லோக் ஆகிய பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர்ந்து கட்டிடங்களுக்குத் தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

புதன்கிழமை காலை சுக்னுவில் தீக்கறையான வீடுகள் பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இந்தியரங்களின் உதவியுடன் இடித்து தரைமட்டமாக்கின. மேலும் தீ வைப்பு சம்பவங்களைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, சூழ்நிலையைச் சமாளிக்க விடுப்பில் சென்றுள்ள போலீசாரை மீண்டும் பணியில் சேர மணிப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய MRF பங்கு மதிப்பு! இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் புதிய மைல்கல்

மே மாத ஆரம்பத்தில் வன்முறை நிகழ்வுகள் அதிகரிக்கத் தொடங்கியதும் சுமார் 1200 போலீசார் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள மணிப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். வெளியேறிய காவல்துறையினரை திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியை மாநில அரசு தொடங்கியுள்ளது. அவர்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள அல்லது தாங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்தில் பணியில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் பலரை தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

முன்னதாக, மே 3 அன்று மெய்தி சமூகத்தினரின் பட்டியல் பழங்குடி அந்தஸ்து கோரிக்கைக்கு எதிராக குக்கி பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர். அந்தப் பேரணியின்போது இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து அடிக்கடி நடந்த வன்முறை நிகழ்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300 க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் அதிகாலையில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்; தூக்கத்தை இழந்து பீதியில் உறைந்த பொதுமக்கள்

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!