ராகுல் காந்தியின் யாத்திரைக்கு மணிப்பூர் அரசு நிபந்தனையுடன் அனுமதி!

By SG Balan  |  First Published Jan 10, 2024, 7:36 PM IST

நாடு முழுவதும் உள்ள குடிமக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணத்தை ஜனவரி 14ஆம் தேதி ராகுல் காந்தி மணிப்பூரின் இம்பால் நகரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கான அனுமதி வழங்கி மணிப்பூர் மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில் யாத்திரையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களின் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணித்த ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூரில் இருந்து குஜராத் வரை பயணம் செய்ய உள்ளார். இந்த யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

Tap to resize

Latest Videos

நாடு முழுவதும் உள்ள குடிமக்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணத்தை ஜனவரி 14ஆம் தேதி ராகுல் காந்தி மணிப்பூரின் இம்பால் நகரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா! உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை: மகாராஷ்டிர சபாநாயகர்

இதற்காக இம்பாலில் உள்ள ஒரு மைதானத்தைப் பயன்படுத்த மணிப்பூர் அரசு அனுமதி மறுத்திருந்தது. சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டுதான் அனுமதி மறுக்கப்பட்டதாக மாநில அரசு கூறியது.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களில், பாரத் ஜோடோ நெய் யாத்திரையை இம்பாலில் இருந்து தொடங்க மணிப்பூர் அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளார். நடைபயணத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் மட்டுமே இருக்க  வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அனுமதி வழங்க மறுத்த மணிப்பூர் மாநில அரசின் முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. மக்களின் உரிமைகளை மீறுவதாகவும், என்ன நடந்தாலும் யாத்திரை மணிப்பூரில் இருந்து தொடங்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறியது.

பாலிவுட் விழாக்களில் செருப்பு போட்டுச் சென்றால் தப்பா... உருவக் கேலி குறித்து விஜய் சேதுபதி வேதனை

click me!