கர்நாடக மாநிலத்தில் பெண் பயணி இருக்கையில் குடிபோதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்த சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெண் பயணி இருக்கையில் குடிபோதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்த சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் ஆண்டு நியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் சக பயணி சிறுநீர் கழித்த சம்பவம் பெரிய சர்ச்சையைானது.
இப்போது பேருந்திலும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால், அந்த பெண் எந்தப்புகாரும் அளிக்க முன்வாரததையடுத்து, சிறுநீர் கழித்த போதை ஆசாமியும் அதே பேருந்தில் பயணித்த அவலம் நடந்தது.
தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள்… விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!!
கடந்த செவ்வாய்கிழமை கர்நாடகமாநிலம் விஜயபுரா நகரில் இருந்து மங்களூருக்கு கர்நாடக அரசு பஸ் KA-19F3554 என்ற எண் கொண்டபேருந்து சென்றது. இந்தப் பேருந்து ஹூப்பள்ளி அருகே வந்தபோதுதான் சிறுநீர் கழிப்பு சம்பவம் நடந்தது.
ஹூப்பள்ளி அருகே கிரேசூரில் பேருந்து இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது, இருக்கை எண் 28-ல் அமர்ந்திருந்த 32வயதுநிரம்பிய இளைஞர், மதுபோதையில் இருந்தார். பேருந்தில் 3வது இருக்கையில் 20 வயதுள்ள பெண் பயணி பயணித்தார்.
பேருந்து நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்த அந்த இளைஞர் நடந்து வந்து பெண் பயணி இருக்கை மீது சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸுக்குள் ஏறிய அந்தப் பெண் பயணி தனது இருக்கையில் போதை ஆசாமி சிறுநீர் கழிப்பதைப் பார்த்து கூச்சலிட்டார். அந்த போதை ஆசாமியும், அந்த பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றார்.
உடனடியாக, சக பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் வந்து, அந்த போதை இளைஞரை கவனித்து பேருந்தில் இருந்து இறக்கினர். ஆனாலும், அந்த பயணி போதையில் உளறிக்கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்துக்குப்பின், நடத்துனர், ஓட்டுநர் பெண் பயணியின் இருக்கையை சுத்தம் செய்து, அவருக்குப் பாதுகாப்பாக வேறு ஒரு பெண் பயணியை அமரவைத்தனர்.
இது தொடர்பாக அந்த பெண் பயணியிடம் போலீஸாரிடம் புகார் அளிக்க நடத்துனர் கேட்டுள்ளார். ஆனால், போலீஸில் புகார் அளிக்க, அந்தப் பெண் பயணி மறுத்துவிட்டார். இதையடுத்து, அதே பேருந்தில், போதை ஆசாமியும் சேர்ந்து பயணித்துள்ளார்.
மங்களூரு மண்டல பேருந்து கட்டுப்பாட்டாளர் ராஜேஷ் ஷெட்டி கூறுகையில் “ பேருந்தில் பெண் பயணி இருக்கை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து அறிந்தேன். அந்த பெண் பயணி எங்களிடமோ, போலீஸிடமோ புகார் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் நடக்கும்போது அந்த பெண் பயணியும் பஸ்ஸில் இல்லை. அந்த பெண் பயணி பஸ்ஸுக்குள் ஏறியபோது, அவரின் இருக்கையில் ஒருவர் சிறுநீர் கழித்ததைப் பார்த்துதான் சத்தம் போட்டுள்ளார். புகார்அளிக்கவும் மறுத்துவிட்டார்.
ராகுல் காந்தி சொல்வதைக் கேட்க நான் தயார்... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவது என்ன?
அதனால்தான் குடிபோதையில் இருந்த ஆசாமியும்பேருந்தில் பயணித்தார்” எனத் தெரிவித்தார்
போதையில் சிறுநீர் கழித்த அந்த இளைஞருக்கு 29 முதல் 32வயது இருக்க வேண்டும். பொறியியல் பட்டதாரியான இளைஞர், விஜயபுராவில் இருந்து மங்களூருக்கு சென்றார்.