1-ஆம் வகுப்பில் 6 வயது முடிந்த குழந்தைகளையே சேர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

By Pothy Raj  |  First Published Feb 23, 2023, 1:18 PM IST

6 வயது நிறைவடைந்த குழந்தைகளை மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


6 வயது நிறைவடைந்த குழந்தைகளை மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

ஆனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் குழந்தைகுக்கு ஒவ்வொருவிதமான வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்துவதன் மூலம் குழந்தைப் பருவப் பராமரிப்பு மற்றும் கல்வியை முறையான பள்ளிக் கல்வி முறையின் கீழ் கொண்டு வந்து அதை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இருந்து கல்வி அமைச்சகத்திற்கு மாற்றியமைக்கிறது.

ரூபா ஐபிஎஸ்-க்கு எதிராக ரோஹினி ஐஏஎஸ் ரூ.ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில்அவதூறு வழக்கு

தேசியக் கல்விக்கொள்கை 2020ன்படி, 3 வயதுமுதல் 6வயதுள்ள குழந்தைகள் 10+2 கட்டமைப்புக் கல்விமுறைக்குள் வரமாட்டார்கள். புதிய கட்டமைப்பின்படி, 3 வயதுமுதல் 8வயதுள்ள குழந்தைகள் அடிப்படைக் கல்விப்பிரிவுக்குள் வருவார்கள்.

இதில் 3 ஆண்டுகள் ப்ரீ-ஸ்கூலிங் 2 ஆண்டுகள் தொடக்கக் கல்வி, அதன்பின் நடுத்தர மற்றும் மேல்நிலைக் கல்வி 5+3+3+4 ஆகியவ திட்டத்தின் படி அமையும். 3 வயதில் இருந்தே அடிப்படைக் கல்வி வலுவாக இருக்கு வேண்டும் அதன் மூலம் சிறந்த கற்றல் மற்றும் மேம்பாடு இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, “ கிரேட்1(ஒன்றாம்வகுப்பு) வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அல்லது 6 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

அங்கன்வாடிகளில் அல்லது அரசால் நடத்தப்படும் பள்ளிகள்  அல்லது உதவி பெறும் குழந்தைகள் பள்ளிகளில், அரசு சாரா நிறுவனங்கள் அல்லது பிற தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளில் அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான பாலர் கல்வியை மூன்று வருடங்கள் வழங்குவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள், யூனியன்பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம் உள்ளிட்ட13 மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்கள்… விரைந்து முடிக்க பிரதமர் மோடி உத்தரவு!!

2022, மார்ச் மாதம் மக்களவையில் மத்திய அரசு கூறுகையில் “ பல்வேறு மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பல்வேறு வயதுகள் பின்பற்றப்படுகின்றன. 14 மாநிலங்களில் குழந்தைகளுக்கு 6வயது நிறைவடையும் முன்பே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

அசாம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, லடாக்கில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு 5 வயது தொடங்கியவுடன் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள். ஆந்திர மாநிலம், டெல்லி, ராஜஸ்தான், உத்தரகாண்ட், ஹரியாணா, கோவா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளாவில் ஒன்றாம் வகுப்பில் குழந்தைகளை சேர்க்க 5 வயது நிறைவடைந்திருந்தால் சேர்க்கப்படுகிறார்கள். 

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் கடந்த ஆண்டு முதல் 6 வயது முடிந்த குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

click me!