GatiShakti: கதிசக்தி திட்டம் என்றால்? உள்கட்டமைப்பு வசதிகளைத் துரிதப்படுத்துவது எப்படி?

By SG BalanFirst Published Feb 23, 2023, 12:50 PM IST
Highlights

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டதுதான் கதிசக்தி திட்டம்.

உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் திட்டங்களைச் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கவும் உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் கதிசக்தி.

இத்திட்டத்தை கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர், இத்திட்டம் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

மத்திய மாநில அரசுகளின் துறைகள் மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த கதிசக்தி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் குறித்த காலக்கெடுவுக்குள் திட்டங்கள் முடிக்கப்படவும் இத்திட்டம் வழிவகை செய்யும்.

மாநில அரசுகள் மேற்கொள்ளும் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு கதிசக்தி இணையதளம் மூலம் விரைவாக ஒப்புதல் பெறமுடியும். இதனால் ரயில்வே, சாலை, கப்பல், மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகள் மேலும் விரிவுபடுத்த முடியும்.

Budget webinar 2023: பசுமை ஆற்றல் சந்தையில் இந்தியா முன்னணி வகிக்கும் - பிரதமர் மோடி நம்பிக்கை


கதிசக்தி திட்டம் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை விரிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரயில்களின் சரக்கு கையாளும் அளவு 1,600 மில்லியன் டன்னாக உயர்த்துதல், 35,000 கிமீ எரிவாயு குழாய் நெட்வொர்க் அமைத்தல், 220 விமான நிலையங்கள் அமைத்தல் போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புத்துறை வாயிலாக உற்பத்தி 1.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவது, 2025ஆம் ஆண்டுக்குள் 38 மின்னணு உற்பத்தி முனையங்கள், 109 மருந்து உற்பத்தி முனையங்கள் உருவாக்குவது ஆகிவயவையும் கதி சக்தி திட்டத்தின் இலக்குகளாக உள்ளன.

இந்த இலக்குகளை வெற்றிகரமாக எட்டுவதற்காக மத்திய அமைச்சகங்களும் மாநில அரசுகளும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும்போது கதிசக்தி இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Gurugram: கொரோனா அச்சத்தால் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு

click me!