18 வயது இளம் பெண்ணுடன் உல்லாச ஆசை... ரூ.46 லட்சம் பணத்தை இழந்த 65 வயது அதிகாரி..!

Published : Apr 02, 2019, 11:46 AM ISTUpdated : Apr 02, 2019, 11:57 AM IST
18 வயது இளம் பெண்ணுடன் உல்லாச ஆசை... ரூ.46 லட்சம் பணத்தை இழந்த 65 வயது அதிகாரி..!

சுருக்கம்

அழகிகளிடம் உல்லாசமாக இருக்கலாம் என்ற மோகத்தால் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் ரூ.46 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

அழகிகளிடம் உல்லாசமாக இருக்கலாம் என்ற மோகத்தால் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் ரூ.46 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

மும்பை குரார் பகுதியில் ஓய்வுபெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகிறார். 65 வயதாகும் இவர், வழக்கம் போல இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, அதில் சில ஆபாச இணையதள பக்கத்தில் விளம்பரம் வந்தது. இதை பார்த்து சரித்த அவருக்கு ஆசை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அந்த இணையதள பக்கத்துக்குள் சென்று பார்த்தார். 

அப்போது அதில் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து உறுப்பினராக இணைந்தால் அழகிய இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிகாரி அவரது முழு விவரங்களை பதிவு செய்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய எண் ரூ.10 லட்சம் செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் 3 அழகிகளுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும் இதற்கு பல்வேறு சேவை கட்டணங்களும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு அதிகாரி, பெண் கூறிய வங்கிக் கணக்கில் பல லட்சத்தை செலுத்தியுள்ளார். 

இந்நிலையில் அந்தப் பெண், வேறு ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை ஓய்வுபெற்ற அதிகாரிக்கு கொடுத்தார். அந்தப் பெண்ணும் பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகினார். இதனையடுத்து அவர் சேமித்து வைத்த 46 லட்சத்தையும் இழந்த அதிகாரி, இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!