அமுல் பேபி... அமுல் பேபி... ராகுல் காந்தியை மரண கலாய் செய்யும் அச்சுதானந்தன்!

Published : Apr 02, 2019, 10:59 AM IST
அமுல் பேபி... அமுல் பேபி... ராகுல் காந்தியை மரண கலாய் செய்யும் அச்சுதானந்தன்!

சுருக்கம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமுல்பேபியாகவே இருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாரம்பரியமாகப் போட்டியிடும் அமேதி தொகுதியில்  ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது. வயநாட்டில் ராகுலை தோற்கடிப்போம் என்று இடதுசாரி கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவதை இடதுசாரி கட்சித் தலைவர்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.

 
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தனும் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். தனது முக நூல் பக்கத்தில் இதுதொடர்பாக அவர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

 
அதில், “கடந்த 2011-ம் ஆண்டு கேரள சட்டப்பேரவைத் தேர்தலின்போது ராகுல் காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சி இல்லாமல் இருந்தது. அப்போது நான் அவரை அமுல் பேபி என்று அழைத்தேன். தற்போது ராகுல் நடுத்தர வயதை எட்டிவிட்டார். ஆனால், அவரது நடவடிக்கைகள் இன்னும் மாறவே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Petrol Price Cut: திடீரென சரிந்த பெட்ரோல் விலை! லிட்டருக்கு 5 ரூபாய் சரிவு.! இந்த பங்குகளுக்கு போனா டேங்க் ஃபுல் பண்ணலாம்.!
Job Guarantee Update : ஹேப்பி.! இன்று முதல் ஹேப்பி.! இனி 125 நாட்கள் வேலை உறுதி..! இன்று முதல் புதிய திட்டம் அமல்..!