பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து... 6 பேர் உயிரிழப்பு..!

Published : Mar 31, 2019, 05:30 PM IST
பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து... 6 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் தனியார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. டர்ஹல் பகுதியில் சென்றபோது வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடியது. இதில் நிலைகுலைந்த வாகனம் அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்தனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நாட்டின் முதல் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஆன்லைனில் வாக்கி-டாக்கி விற்பனை.. பிளிப்கார்ட், மீஷோ உள்ளிட்ட 8 நிறுவனங்களுக்கு விழுந்த அடி!