மம்தா பானர்ஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு முன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பர்த்வானில் நடைபெற்றா நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அக்கூட்டத்தை முடித்து விட்டு, சாலை மார்க்கமாக மீண்டும் அவர் கொல்கத்தாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மம்தா பானர்ஜியின் காருக்கு குறுக்கே மற்றொரு கார் எதிர்பாரா விதமாக வந்தது.
இதனால், அந்த காரின் மீது மோதாமல் இருக்க மம்தா பானர்ஜி சென்ற காரின் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால், நிலைகுழைந்த மம்தா, முன்பக்க கண்ணாடியில் மோதினார். இதில், அவரது முன் நெற்றியில் காயம் ஏற்பட்டது. ஆனால், மருத்துவ உதவி கூட செய்து கொள்ளமால மம்தா பானர்ஜி உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. “திடீரென்று ஒரு கார் அதிவேகமாக எங்கள் முன் வந்தது. எனது ஓட்டுநர் விழிப்புடன் இருந்ததால் கடவுள் அருளால் நான் காப்பாற்றப்பட்டேன். எனக்கு வலி மற்றும் வீக்கம் உள்ளது. உடல்நிலை சரியில்லை என்பதால் சில மருந்துகள் எடுத்துக் கொண்டுள்ளேன்.” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் பயணம்!
பர்த்வானில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் மம்தா பானர்ஜி சென்றுள்ளார். ஆனால், கூட்டத்தை முடித்துக் கொண்டு, கொல்கத்தா திரும்பும்போது மோசமான வானிலை காரணமாக அவரால் மீண்டும் ஹெலிகாப்டரில் செல்ல முடியவில்லை. இதனால், சாலை மார்க்கமாக அவர் கொல்கத்தா திரும்பினார். கிளம்பிய சிறிது நேரத்திலேயே, அவர்களது கான்வாய் பாதைக்குள் கார் ஒன்று வழி தவறி வந்ததால், ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில், நிலைகுழைந்த மம்தா, முன்பக்க கண்ணாடியில் மோதியதால் அவரது முன் நெற்றியில் காயம் ஏற்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் வரை அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகாதீர்கள்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
முன்னதாக, பர்த்வான் ஆய்வுக் கூட்டத்திற்கு செல்லும் முன்பு, மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.