‘ஹேக்’ செய்யப்பட்ட மல்லையாவின் டுவிட்டர் கணக்கு - சொத்துக்களை வெளியிடப்போவதாக மிரட்டல்

First Published Dec 9, 2016, 4:13 PM IST
Highlights


விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கை  ஊடுருவிய ஹேக்கர்கள் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை விரைவில் வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர்மீதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில் விஜய் மல்லையாவின் டுவிட்டர் மற்றும் இ-மெயில் கணக்குகள் ஆகியவற்றை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். லீஜியன்கள் என்ற பெயரில் ஹேக் செய்த மர்மநபர்கள், டுவிட்டரில் மல்லையாவின்  வெளிநாட்டு சொத்து விவரம், வங்கிக்கணக்கு விவரம் போன்றவற்றையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த லீஜியன் என்ற பெயரில்தான் கடந்த வாரம் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது,   விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கையும் ஹேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், சில தினங்களில் அவரின் ஒட்டுமொத்த வங்கிக்கணக்கு மற்றும் சொத்து விவரங்களை வெளியிடப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதற்கு நெட்டிசன்களின் ஆதரவு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து விஜய் மல்லையா கூறுகையில் "எனது டுவிட்டர் கணக்கு லீஜியன் என்ற விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. என்னுடைய கணக்கில் அவர்கள் டுவீட் செய்து வருகின்றனர். அவற்றைக் கண்டு கொள்ளாதீர்கள், விரைவில் இது சரி செய்யப்படும்.என்னுடைய கணக்குகளை ஹேக் செய்துவிட்டதாக கூறும் லீஜியன் குழு என்னையே மிரட்டி வருகிறது. இது எவ்வளவு பெரிய நகைச்சுவை" என்று தெரிவித்தார்.

click me!