காவிரி வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு முழு அதிகாரம் உண்டு - மத்திய அரசுக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

First Published Dec 9, 2016, 2:07 PM IST
Highlights


தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007–ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

ஆனால் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என கர்நாடக அரசும், மத்திய அரசும் எதிர்ப்புத் தெரிவித்தன. உந்ந்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இது தொடர்பான வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

click me!