7 மாடி கட்டிடம் இடிந்தது - 10க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

Asianet News Tamil  
Published : Dec 09, 2016, 11:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
7 மாடி கட்டிடம் இடிந்தது - 10க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்

சுருக்கம்

ஹைதராபாத் நகரில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

ஹைதராபாத் நகரில் உல்ல நனகரம்குடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் தொழிலாலர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இருப்பினும், விபத்தின் போது எவ்வளவு பேர் கட்டிடத்திற்கு உள்ளே இருந்தனர் என்பது குறித்து தெரியவில்லை. இந்தக்கட்டடத்தில் சுமார் 14 குடும்பத்தினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, ஹைதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கட்டட இடிபாடுகளில் இருந்து குழந்தை உள்பட 2 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!