கடும் பனிப்பொழிவு....!! உறைந்துபோன அருவி..!!1

First Published Dec 9, 2016, 10:01 AM IST
Highlights


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உறைந்துபோயுள்ள அருவியை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலம் தொடங்கியுள்ளதையொட்டி, தட்பவெட்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்ஷியஸுக்கும் கீழே குறைந்து வருகிறது. இதன் காரணமாக குளிர் அதிகரித்து காணப்படுவதோடு, நீர்நிலைகளும் உறையத் தொடங்கியுள்ளன.

ரஜோரி மாவட்டத்தில் உள்ள Pirpanjal மலைப் பகுதியிலிருந்து கொட்டும் அருவிநீர் பனிக்கட்டியாய் உறைந்து, சொட்டுசொட்டாக நீர் கீழே விழுகிறது. உறைந்துபோன அருவியைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். முக்கிய சுற்றுலா தலமான Dal ஏரியும் குளிர்காலத்தில் உறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!