மாேசடி மன்னன் விஜய் மல்லையாவுக்கு ஆப்பு..!! - இனி இந்தியாவின் எந்த நிறுவனத்திலும் வர்த்தகம் செய்ய முடியாது

Asianet News Tamil  
Published : Jan 26, 2017, 10:36 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
மாேசடி மன்னன் விஜய் மல்லையாவுக்கு ஆப்பு..!! - இனி இந்தியாவின் எந்த நிறுவனத்திலும் வர்த்தகம் செய்ய முடியாது

சுருக்கம்

இந்தியாவின் எந்த ஒரு நிறுவனத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வர்த்தகம் செய்ய விஜய் மல்லயா உள்ளிட்ட 6 பேருக்கு, இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பான செபி தடை விதித்துள்ளது. 

வங்கிகளில் கடனாக‌ பெற்ற‌ ரூ.9,000 கோடியை விஜய் மல்லையா வட்டியுடன் செலுத்தக் கோரி வங்கிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி கடன் வசூல் தீர்ப்பாயம், வங்கிகளுக்கு விஜய் மல்லையா கொடுக்க வேண்டிய கடனை வட்டியுடன் வசூலிக்குமாறு சிபிஐக்கு உத்தர விட்டது.

இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாாிகள் மல்லையாவுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள், பங்கு நிலவரம் ஆகியவை குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்காெண்டு வருகின்றனா். 

இந்நிலையில், வங்கிக் கடன் மோசடி மற்றும் அமெரிக்க நிறுவனத்திற்கு சட்டவிரோதமான பண பரிமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லயா உள்ளிட்ட 6 பேர் இந்தியாவின் எந்த ஒரு நிறுவனத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வர்த்தகம் செய்ய இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பான செபி தடை விதித்துள்ளது. 

இந்திய நிறுவனத்தில் அவர்கள் யாரும் இயக்குனர் போன்ற உயரிய பொறுப்புகள் வகிக்கவும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், பங்கு வர்த்தகர்கள் போன்றவர்களுடன் விஜய் மல்லயா இனி வர்த்தகத்தில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!