
நாடு முழுவதும் இன்று 68வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றினார்.
இதையொட்டி டெல்லியில்,பிரதமர் மோடி, அமர்ஜவான் ஜோதியில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் முப்படை அதிகாரிகளுடன் மலர் வளையம் வைத்தும் மரியாதை செய்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜியத் பங்கேற்றுள்ளார். அத்துடன் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், உட்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக தலைநகர் டெல்லியில் இன்று காலை முதல் திடீரென மழை பெய்தது. இதனால், பேரணி நடத்த வந்த முப்படை வீரர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதையொட்டி சிறிது நேரம், நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், மழையை பொருட்படுத்தாமல் தொடங்கினர். திடீர் மழையால் சிறிது நேரம் குடியரசு தின விழா தொடங்க தாமதம் ஏற்பட்டது. இந்த மழையினால், இன்று காலையில் டெல்லி முழுவதும் ஸ்தம்பித்தது.