ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு ....! 

Asianet News Tamil  
Published : Jan 25, 2017, 06:22 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் :  வழக்கு ஒத்திவைப்பு ....! 

சுருக்கம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் வழக்கு ஒத்திவைப்பு ....! 

ஏர்செல்  மேக்சிஸ்  வழக்கில்  தயாநிதிமாறன்  கலாநிதிமாறன்  உள்ளிட்டோர் மீது,  குற்றசாட்டுகளை பதிவு செய்வது  தொடர்பான வழக்கில்,  உத்தரவு  பிறப்பிப்பதை  சிபிஐ  சிறப்பு நீதிமன்றம்  மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

ஏர்செல்  நிறுவன  பங்குகளை ,  மேக்சிஸ்  நிறுவனத்திடம் விற்க  அதன் உரிமையாளர் சிவசங்கரனுக்கு  அழுத்தம்  தரப்பட்டதாகவும் , இதன் பலனாக சன் குழும  நிறுவனங்களில்  மேக்சிஸ்  நிறுவனம்  அதிக முதலீடு செய்ததாகவும்  டெல்லி  சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்,  வழக்கு  நடைபெற்று வருகிறது.

சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது,  ஏற்கனவே  குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்  அடிப்படையில்,  குற்றசாட்டுகளை  பதிவு செய்வதற்கு  தடை விதிக்க  கோரி  தயாநிதி  மாறன்  உள்ளிட்டவர்கள் தரப்பில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் , நேற்று வழக்கு  விசாரணைக்கு வந்த போது,  வழக்கை பிப்ரவரி  2 ஆம் தேதிக்கு சிபி ஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தயாநிதிமாறன், கலாநிதி மாறன்  ஆகியோரின் முன்ஜாமீன்  மனுக்கள் மீதான  உத்தரவு பிறப்பிப்பத்தும்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!