"தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது.." - சேலத்து சிங்கத்துக்கு உயரிய மரியாதை..!!!

Asianet News Tamil  
Published : Jan 25, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
"தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது.." - சேலத்து சிங்கத்துக்கு உயரிய மரியாதை..!!!

சுருக்கம்

பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உட்பட 20 பேருக்கு

பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனிக்கு பத்மபூஷன் விருதும், பின்னனி

பாடகர் ஜேசுதாஸ் பத்ம விபூஷன் பட்டம் பெறுகிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு 2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் 

தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்தமாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வென்று சாதனை படைத்த சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன், எய்ட்ஸ் நோய்க்‍கு எதிராக போராடிய  தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.சுனிதா சாலமோன்,,பாடகிஅனுராதா பட்வால். ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாக்கர்.

கிரிக்கெட் வீரர் வீராத் கோலி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 20 பேருக்கு  பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று பின்னனி பாடகர் ஜேசுதாஸ் மற்றும் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா ஆகியோருக்குக்கு  பத்ம விபூஷன் விருதும், முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி.ஒலிம்பிக்‍ பேட்மின்டன் போட்டியில் வெள்ளி பதக்‍கம் வென்ற சிந்து ஆகியோருக்கு பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்..

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்தார்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்.. இவரது பெற்றோர்

 தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது,

அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

தற்போது மத்திய அரசு மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!