
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோனாமார்க் ராணுவ முகாம் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் பலியானார். 8 பேர் மாயமாகியுள்ளனர்.
Gurez sector பகுதியில் உள்ள Badoogam கிராமத்தில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மிகக்கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது.
தற்போது அங்கு உறைபனி சீசன் உச்சத்தில் இருப்பதால் பல்வேறு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 10 டிகிரிக்கும் கீழாக காணப்படுகிறது.
Gurez sector பகுதியில் உள்ள Badoogam கிராமத்தில் இன்று திடீரென ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் Lone என்பவரது வீடு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் அவர், அவரது மனைவி, மகள், மகன் என 4 பேரும் சிக்கி உயிரிழந்தனர். ஒருவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் Sonamarg பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமும் பனிச்சரிவுக்குள்ளானதில் அங்கு பணியில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் பனிச்சரிவுக்குள் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது.. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு புதையுண்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.