Make in India-வின் 11வது வந்தே பாரத் ரயில்! போபால் - டெல்லி இடையேயான சேவைக்கு பிரதமர் மோடி பச்சை கொடி!

By Asianet TamilFirst Published Apr 1, 2023, 11:32 AM IST
Highlights

மத்திய பிரதேஷ் மாநிலம் ராணி கம்லாபதி ரயில் நிலையம் முதல் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ள 11வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
 

போபால்-டெல்லி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில் 11வது வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மத்தியபிரதேச தலைநகர் போபாலில் உள்ள ராணி கம்லாபதி முதல் - டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கிடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது.

சுமார் 702 கி.மீ.பயண தூரத்தை 7.30 மணி நேரத்தில் கடக்கும் வந்தேபாரத் ரயிலின் அதிகபட்சவேகம் மணிக்கு 160 கி.மீ. பயணிக்கும். இந்த வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. அதாவது போபாலிலிருந்து விடியற்காலை 5.55 மணிக்கு புறப்பட்டு காலை 11.40 மணியளவில் ஆக்ராவின் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அங்கு 5 நிமிடம் நின்று பின்னர் கிளம்பி மதியம் 1:45 மணிக்கு டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு குட் நியூஸ் சொன்ன மெட்ரோ நிர்வாகம் !!

அதேபோல ரிட்டன் ரயில், புது டெல்லியிலிருந்து மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு ஆக்ராவை அடையும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெல்லை போபால் இடையேயன வந்தே பாரத் ரயில், ஆக்ரா, ஜான்சி, குவாலியர் ஆகிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படும் என்பகது குறிப்பிடத்தக்கது.

பேருந்து ஓட்டுநரான கோவை பெண்… மக்களிடையே குவிந்து வரும் பாராட்டு!!
 

click me!