ஹைட்ரோ கார்பன் எடுக்க ‘புதிய லைசன்ஸ் கொள்கை ’ - ‘நெடுவாசல்’ போராட்டத்தை ஒதுக்கித் தள்ளிய மத்திய அரசு

First Published Mar 7, 2017, 7:09 PM IST
Highlights
Make hydro-carbon new licensing policy - netuvacal struggle the government had ignored


நாட்டில் ஹைட்ரோ கார்பன் எரிபொருள் எடுக்க முதலீட்டாளர்களுக்கான புதியலைசென்சு கொள்கையை மத்தியஅரசு நேற்று வெளியிட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்க்க ஒரு லைசென்சு மூலம் வழக்கமான மற்றும் புதிய நுட்பங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை எடுக்க தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடந்த 20 நாட்களாக போராடி வரும் நிலையில், அதை கண்டுகொள்ளாமல், அதை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

செராவீக் மாநாடு

அமெரிக்காவின் ஹாஸ்டன் நகரில் ரஷியா, சவூதி அரேபியா, இந்தியா, ஐக்கிய அரபுநாடு உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பெட்ரோலியத் துறையைச் சேர்ந்தவர்களின் ‘செராவீக்-2017’ சர்வதேச மாநாடு நடந்து வருகிறது.

இதில் இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர  பிரதான்கலந்து கொண்டார்.

இதில் இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ‘ஹெல்ப்’(HELP) புதிய லைசென்சு கொள்கை மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது-

தனியாருக்கு உதவி

 நாங்கள் வௌியிட்டுள்ள இந்த புதிய ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான புதிய லைசென்சு கொள்கை, முதலீட்டாளர்களுக்கு அதிக சுதந்திரம் அளித்து, கச்சா எண்ணெயையும், இயற்கை எரிவாயுவையும் எளிதாக சந்தைப்படுத்த உதவி உள்ளோம்.

இந்த புதிய லைசென்சு கொள்கை இந்தியாவை வர்த்தகம் மற்றும் தொழில், முதலீட்டுக்கு சிறந்த நட்புநாடு என்ற தோற்றத்தை வெளிப்படுத்தும்.

இதன் மூலம், தற்போது ஆண்டுக்கு 80 மில்லியன் மெட்ரிக் டன் எடுக்கும் எண்ணெய் உற்பத்தி அடுத்த 2022ம் ஆண்டுக்கு 150 முதல் 155 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயரும்.

வருவாய் முக்கியம்

உற்பத்தியாளர்கள் யாருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கமாட்டோம்,  உன்னிப்பாக கண்காணிக்கமாட்டோம். அரசு வருவாயை மட்டுமே பகிர்ந்து கொள்ளோம்.

இந்த கொள்கையின் நோக்கமே, எரிசக்தி துறையில் முதலீட்டை ஈர்த்து, பெட்ரோலியம் துறையை முதலீட்டாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் இருக்குமாறு மாற்றுவது தான். 

தேர்வு செய்யலாம்

இதில் முக்கியமாக நாங்கள் இந்தியாவில் தேர்வு செய்துள்ள ஹைட்ரோ கார்பன் கிடைக்கும் இடங்கள், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எந்த இடத்தை வேண்டுமானாலும், தேர்வு செய்ய நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓபன் ஏக்கரேஜ் என்று பெயரிட்டுள்ளோம்.

ஹைட்ரோ கார்பன் முக்கியம்

இதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகப்படுத்தி,  ஹைட்ரோ கார்பன் எடுப்பதையும் அதிகப்படுத்த வேண்டும். சர்வதேச தொழில்நுட்பங்கள், நவீன முறைகள் மூலம்தான் இந்த துறையை மேம்படுத்த முடியும்.

மோடியின் லட்சியம்

இதை மனதில் வைத்து இந்த துறையை முற்றிலும் மாற்ற மைல்கல்லாக இந்த மாற்றத்தை செய்து இருக்கிறோம். இந்த திட்டம் பிரதமர் மோடியின் லட்சியத் திட்டமாகும்.அவரின் இலக்குகளை அடைய எரிசக்தி திட்டம் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!