Viral Photo | பெய்லி பாலத்தில் மேஜர் சீதா ஷெல்கே! - சவால்களை எதிர்த்து சாதித்த பெண் ராணுவ பொறியாளர்!

By Dinesh TG  |  First Published Aug 2, 2024, 1:26 PM IST

வயநாட்டின் முண்டக்கையில் நிலச்சரிவுக்குப் பிறகு ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலத்தின் மீது நின்றிருக்கும் பெண் ராணுவப் பொறியாளர் மேஜர் சீதா ஷெல்கேவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கிடையே, சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம் ஒன்று மீட்புப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை சந்தேகிப்பவர்களுக்கு வலுவான மறுப்பாக மாறியுள்ளது. வயநாடு மண்சரிவைத் தொடர்ந்து முண்டக்கை பகுதியில் ராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தில் மேஜர் சீதா ஷெல்கே என்ற பெண் ராணுவப் பொறியியலாளர் வெற்றியுடன் நிற்பதுபோன்ற புகைப்படம் வைலாகி வருகிறது. மீட்பு நடவடிக்கையில் அவரது முக்கிய பங்கைக் காட்டி, முக்கியமான பாலத்தை கட்டுவதில் மேஜர் ஷெல்கேவின் தலைமைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேஜர் சீதா அசோக் ஷெல்கே, மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தில் பர்னர் தாலுகாவில் உள்ள காதில்காவ் என்ற சிறிய கிராமத்தில் இருந்து ராணுவத்தில் சேர்ந்தார். வெறும் 600 பேர் மட்டுமே வசிக்கும் காதில்காவ் ஒரு சிறிய கிராமம். அகமதுநகரில் உள்ள லோனியில் உள்ள பிரவாரா ரூரல் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஷெல்கே ராணுவத்தில் சேர்ந்தார்.

வயநாடு நிலச்சரிவு! 8 கி.மீ அடித்துச்செல்லப்பட்ட குப்பைகள்! 86000 ச.மீ பரப்பளவில் பயங்கர சேதம்! -மீளா துயரம்

சீதா அசோக் ஷெல்கேவின் ஆரம்பத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்பட்டு, நாளடைவில் அதுவே ராணுவப் பணியாக மாறி தனது மூன்றாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றார். இறுதியில் 2012 இல் இராணுவத்தில் சேர்ந்தார்.

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (OTA) தனது பயிற்சியை முடித்த மேஜர் சீதா அசோக் ஷெல்கே பெய்லி பாலத்தை நிர்மாணிப்பதில், இராணுவ மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுவைச் சேர்ந்த 250 வீரர்கள் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்கினார்.

Tap to resize

Latest Videos

Wayanadu Landslide|அண்ணன், அண்ணி, அத்தை மாமா என மொத்தம் 26 குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த சுல்தான்!

இரவும் பகலும் கடும் அயராத முயற்சிகளுக்குப் பிறகு, 190 அடி நீளமுள்ள எஃகுப் பாலத்தை ராணுவம் வெற்றிகரமாக கட்டி முடித்தது. கனமழை மற்றும் வெள்ளத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இப்பாலத்தில் மீட்புப் பணிகளுக்கு அத்தியாவசியமான வாகனங்கள் இயங்கவும் தொடங்கியுள்ளது. இது அடுத்தகட்ட மீட்புப் பணிகளுக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.

click me!