கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இரட்டை நிலச்சரிவுகள் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோவின் NRSC இன் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் முண்டக்கை ஆற்றின் விரிவாக்கம் உட்பட விரிவான நிலப்பரப்பு மாற்றங்களை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட அடுத்தடுத்த இரட்டை நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூரல் மலை, மேப்பட்டி, முண்டக்கை ஆகிய மூன்று கிராமங்களையும் தண்ணில் மண்ணோடு புதைத்துக்கொண்டது. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
NRSC வெளியிட்ட நிலச்சரிவு சேத படங்கள்
தோராயமாக 86000 சதுர மீட்டர் நிலம் நிலச்சரிவில் சிக்கி அழிந்துள்ளதாக இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (NRSC) உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் சேதத்தின் அளவை படம் பிடித்துக் காட்டியுள்ளது. சூரல்மலை அருகே 1,550 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, முண்டக்கை ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரம் உருண்டு ஓடிய பெரிய குப்பையால் பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
நிலச்சரிவில் உருண்டோடிய கல், மண் குப்பையால் அதன் பாதையில் உள்ள நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் அழந்தன. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் பெரும் சேத்ததை சந்தித்துள்ளன.
இஸ்ரோவின் Risat மற்றும் Cartosat-3 மூலம் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் பாதிக்கப்பட்ட பகுதியை ஒப்பிடுவதற்கு முன்னும் பின்னும் என தெளிவான தகவல்களை வழங்குகின்றன. ரிசாட்டின் கிளவுட்-ஊடுருவக்கூடிய ரேடார் மற்றும் கார்டோசாட்-3 இன் மேம்பட்ட ஆப்டிகல் திறன்கள் பேரழிவின் தாக்கத்தை விரிவாக மதிப்பீடு செய்ய உதவுகிறது.
இந்த மிகப்பெரிய நிலச்சரிவு வயநாட்டின் நிலப்பரப்பை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது என செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்துகின்றன. நிலச்சரிவு முண்டக்கை ஆற்றை விரிவுபடுத்தியது மற்றும் அதன் கரையில் உடைப்புகளை ஏற்படுத்தியது என்று NRSC அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
undefined
86000 சதுர மீட்டர் பரப்பளவில் சேதம்
வயநாட்டின் சூரல்மலை அருகே பெய்த கனமழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறு சிறு கற்கள், ஒன்றிணைந்து ஒரு பெரிய மலை போல் திண்டு உருண்டோடியது. சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு உருண்டோடிய குப்பைகள் வழியிலிருந்த வீடுகள், கிராமங்கள் அனைத்தையும் நாசம் செய்தன. முண்டக்கை ஆற்றின் குறுக்கே பாய்ந்து அதனையும் விரிபடுத்தியது. இந்த நிலச்சரிவால் சுமார் 86,000 சதுர மீட்டர் பரப்பளவில் பெருத்த சேதம் ஏற்பட்டதையும் NRSC அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
NRSC மேற்கொண்ட சோதனை
கேரளா மற்றும் கர்நாடகாவில் முறையே வயநாடு மற்றும் குடகு மாவட்டங்கள் உட்பட - இந்தியாவின் இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நிலச்சரிவுகளை வரைபடமாக்க இந்த மாதிரி உருவாக்கப்பட்டது. “மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, மிசோரம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த முறை சோதிக்கப்பட்டது, கடந்த கால நிலச்சரிவு இருப்புத் தரவுகளுடன் ஒப்பிடும்போது நிலச்சரிவுகளை சரியான நேரத்தில் கண்டறிவது மற்றும், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கை திட்டமிடலுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
நிலச்சரிவு அட்டஸ்! அடையாளம் காணப்பட்ட வயநாடு!
இஸ்ரோ 1998-2022 வரையில் இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் சுமார் 80,000 நிலச்சரிவுகளை ஆவணப்படுத்தி, இந்தியாவின் நிலச்சரிவு அட்லஸை வெளியிட்டது கடந்த பிப்ரவரி 2023ல் வெளியிட்டது. நிலச்சரிவு வெளிப்பாடு மற்றும் சமூக-பொருளாதார காரணிகளின் அடிப்படையில் அட்லஸ் 147 மாவட்டங்களை வரிசைப்படுத்தியது, பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வயநாடு ஏற்கனவே அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வயநாடு நிலச்சரிவு: பெய்லி பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது! முண்டக்கையில் மீட்புப் பணிகள் தீவிரம்!