எங்கள் கொள்கை காந்தியின் அகிம்சை... பாஜகவின் கொள்கை கோட்சேவின் வன்முறை: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

By SG Balan  |  First Published Jun 5, 2023, 1:14 PM IST

காங்கிரஸ் பின்பற்றும் சித்தாந்தம் வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தேடும் மகாத்மா காந்தியின் அகிம்சை சித்தாந்தம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


தற்கால இந்தியாவைக் கட்டமைத்த முக்கிய தலைவர்கள் திறந்த மனதுடன் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்) என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் திங்கள்கிழமை நியூயார்க்கில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் உட்பட நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தொடர்புடைய அனைத்து முக்கிய தலைவர்களும் என்.ஆர்.ஐ.க்கள் என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

ரயில் விபத்து பலி எண்ணிக்கையைக் குறைத்துக் கூற முயலவில்லை: ஒடிசா மாநில அரசு விளக்கம்

"நவீன இந்தியாவை வடிவமைத்த கலைஞர்களில் முதன்மையானவரான மகாத்மா காந்தி ஒரு வெளிநாடு வாழ் இந்தியர். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அடித்தளம் தென்னாப்பிரிக்காவில் போடப்பட்டது... நேரு, பி.ஆர். அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், சுபாஷ் சந்திரபோஸ், அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்தான். அவர்கள் வெளி உலகத்தைப் பற்றி திறந்த மனதுடனும் இருந்தார்கள்" என்று ராகுல் காந்தி கூறினார்.

தொடர்ந்து பாஜக குறித்து விமர்சங்களை முன்வைத்த ராகுல் காந்தி, "நாடு இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போரை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று காங்கிரஸால் ஆதரிக்கப்படுகிறது, மற்றொன்றை ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கருத்தியல் வாரிசான பாஜக ஆகியவை ஆதரிக்கின்றன என்றார்.

குஜராத்தில் ரூ.13,000 கோடியில் உருவாகும் டாடா மின்சார வாகன பேட்டரி தொழிற்சாலை

LIVE: Address to the Indian Diaspora | New York, USA https://t.co/xolpviON3O

— Rahul Gandhi (@RahulGandhi)

மேலும், காங்கிரஸுக்கு மிகவும் பிடித்தமான கொள்கைகள் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகள் மட்டுமே என்றும் அவர் கூறினார். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஆதரிக்கும் கருத்துகள் மகாத்மா காந்தியைக் கொன்ற வலதுசாரித் தலைவரான நாதுராம் கோட்சேவின் கருத்துகள் என்று ராகுல்க காந்தி சாடினார்.

"நாங்கள் பின்பற்றும் சித்தாந்தம் மகாத்மா காந்தியின் சித்தாந்தம். அவர் ஒரு என்ஆர்ஐ, அகிம்சையைப் பிரச்சாரம் செய்தவர், கனிவும் எளிமையும் கொண்ட மனிதர். அவரது சித்தாந்தம் வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தேடும் சித்தாந்தம். ஆனால், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பின்பற்றும் சித்தாந்தம் நாதுராம் கோட்சே உடையது. அவர் வாழ்க்கையின் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத வன்முறை மனப்பான்மையும் கோபமும் கொண்ட மனிதர்" என ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டார்.

நள்ளிரவில் அமித் ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு; சட்டம் தன் பணியைச் செய்யும் என உறுதி

click me!