கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 68 வயது முதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த வர்கலா பகுதியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கலி் தலைமறைவாக இருந்து வருவதால் வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தம்மை தாக்கி வன்கொடுமை செய்துவிட்டதாக மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பாலியல் வன்கொடுமை குறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் மூதாட்டி குறிப்பிட்டுள்ளார்.
காவிரியில் மூழ்கி தம்பதி பலி; கரையில் நின்றிருந்த குழந்தைகள் ஏமாற்றம்
மூதாட்டின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அம்மினி பாபு (வயது 50) என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பாலியல் தொல்லை தாங்கமுடியவில்லை; சுவர் ஏறி குதித்து தப்பித்த சிறுவன் - பெண் காப்பாளர் கைது
இதனைத் தொடர்ந்து அம்மினி பாபு மீது அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு சிறையில் அடைத்தனர்.