
இதற்கு முன்னதாக அவுரங்காபாத் என்று அழைக்கப்படும் அந்த மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெளியான தகவலின்படி, பிட்கின் கிராமப்புற அரசு மருத்துவமனையின் அந்த மருத்துவர் ஏதோ ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாகி அவதிப்பட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அது தான் அவரை உடையின்றி மருத்துவமனையைச் சுற்றி வர செய்துள்ளது என்றும், அந்த நிகழ்வின்போது அந்த மருத்துவர் போதையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை தலைவர் டாக்டர் தயானந்த் மோதிபவ்லே கூறுகையில், ‘‘விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் புதிய படத்தை வெளியீடு! மக்கள் உதவியை கோரும் என்.ஐ.ஏ!
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு அரசு மருத்துவரே இப்படி நடந்துகொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரிடமிருந்து நோயாளிகளை காக்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மருத்துவரே போதைக்கு அடிமையாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப்பொருளைக் கடத்திய ஜாபர் சாதிக்: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தகவல்