ஜாபர் சாதிக் போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்துள்ளார் என போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் கூறியிருக்கிறார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக் 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார் என்றும் மங்கை என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார் என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங் கூறியுள்ளார்.
ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
undefined
தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த ஞானேஷ்வர் சிங், "போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்" எனக் குறிப்பிட்டார்.
"சர்வதேச போதைப்பொருள் கடத்தலிலிலும் அவருக்குத் தொடர்பு உள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருள்களைக் கடத்தி வந்தார்" என்றும் தெரிவித்தார்.
பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் புதிய படத்தை வெளியீடு! மக்கள் உதவியை கோரும் என்.ஐ.ஏ!
"போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் முதலீடு செய்திருக்கிறார். இந்த முதலீடுகள் குறித்து விசாரிக்கப்படும். சுமார் 3,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப்பொருள் ஏற்றுமதி செய்வது போல போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தார் எனவும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக ஞானேஷ்வர் சிங் கூறினார்.
மங்கை படத்தை எடுத்த ஜாபர் சாதிக்:
"போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தை அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்துள்ளார். மங்கை என்ற தமிழ் திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலருடன் ஜாபர் சாதிக்கிற்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது" என்று ஞானேஸ்வர் தெரிவித்துள்ளார்.
"விசாரணைக்குப் பிறகு ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வெளியிடுவோம். சென்ற பிப்ரவரி 25ஆம் தேதி கைது செய்யப்பட்ட 3 பேர் கொடுத்த தகவலின்படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் கூறியிருக்கிறார்.
சந்திரயான் 4 திட்டத்தில் டபுள் ராக்கெட்! மாஸ் காட்டும் இஸ்ரோவின் மாஸ்டர் பிளான்!