“மறக்கமுடியாத பயணம்” உலகம் முழுவதும் உள்ள மக்கள் காசிரங்காவுக்கு வருகை தர பிரதமர் மோடி அழைப்பு..

By Ramya s  |  First Published Mar 9, 2024, 3:18 PM IST

உலகெங்கிலும் உள்ள மக்கள் காசிரங்காவுக்கு வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.


அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் ரூ55,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதற்காக நேற்று மாலை அசாம் சென்ற பிரதமர் மோடி, ஜோர்ஹாட்டில் புகழ்பெற்ற அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 125 அடி உயர 'வீரத்தின் சிலை'யைத் திறந்து வைத்தார். தொடர்ந்து காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் (KNPTR) உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்றிரவு தங்கினார். 

அசாமில் இன்று காலை 17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஜோர்ஹாட்டில் நடைபெற்ற விழாவில் சுகாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே மற்றும் வீட்டு வசதி துறைகளை வலுப்படுத்தும் திட்டங்களை பிரதமர் வெளியிட்டார்.

Tap to resize

Latest Videos

அசாமின் மதிப்பை உணர்த்தும் தேயிலை தோட்டங்கள்.. நேரில் சென்று அதன் அழகை ரசித்த பிரதமர் மோடி - Latest Clicks!

வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி (PM-DevINE) திட்டத்தின் கீழ் அவர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்களில் சிவசாகரில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் குவஹாத்தியில் ஒரு ஹீமாடோ-லிம்பாய்டு மையம் ஆகியவை அடங்கும்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காலை அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி ஜீப்பிலும், யானை மீதும் சவாரி செய்தார். இந்த ஆய்வின் போது பூங்கா இயக்குனர் சோனாலி கோஷ் மற்றும் பிற மூத்த வன அதிகாரிகள் பிரதமருடன் சென்றனர்.

2 புதிய படைப்பிரிவுகள்.. இந்திய ராணுவம் கையில் எடுத்த ‘பினாகா’.. சீனாவுக்கு ஆப்பா.? வெளியான தகவல்..!

அசாம் பயணம் குறித்து தனது X வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ காசிரங்காவிற்கு ஒரு மறக்கமுடியாத வருகை. உலகெங்கிலும் உள்ள மக்களை இங்கு வருமாறு அழைக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

A memorable visit to Kaziranga. I invite people from all over the world to come here. pic.twitter.com/N1yW4XKRyx

— Narendra Modi (@narendramodi)

 

மேலும் காசிரங்கா தேசிய பூங்காவிற்கு தான் சென்ற போது யானை மற்றும் ஜீப்பில் செய்த சவாரி குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

 

click me!