மகாராஷ்டிராவில் மடமடக்கி தாக்கும் கொரோனா... பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சம்... உயிரிழப்பு 2200ஆக உயர்வு..!

By vinoth kumarFirst Published May 31, 2020, 5:14 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரான மும்பையிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 65,168 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,197ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 21,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,000 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 18,549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 416 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8075 பேர் குணமடைந்துள்ளனர்.

click me!