ரூ.50 லட்சம் நிதி உதவி.! பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Published : Apr 29, 2025, 05:59 PM ISTUpdated : Apr 29, 2025, 06:03 PM IST
ரூ.50 லட்சம் நிதி உதவி.! பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

சுருக்கம்

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்துள்ளார். 

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்றிருந்த 26 பேர் தீவிரவாதிகளில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடும் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியுள்ளது. இந்திய அரசு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அதிரடி உத்தரவிட்டது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்

மஹாராஷ்டிராவை சேர்ந்த 6 பேர் பலி

இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு அந்த, அந்த மாநில அரசுகள் இழப்பீடுகள் அறிவித்துள்ளது. அந்த வகையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் 6 பேர்  மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார். அதன் படி,  பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும்  மாநில அரசு இந்தக் குடும்பங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உதவும் என தெரிவித்துள்ளார்.

போருக்குத் தயாராகும் இந்தியக் கடற்படை! அரபிக் கடலில் நடந்த ஒத்திகை!

50 லட்சம் ரூபாய் இழப்பீடு

ஜக்தலே குடும்பத்தின் மகளுக்கு அரசு வேலை வழங்குவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். முன்னதாக தீவிரவாத தாக்குதலின் போது  ஸ்ரீநகரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு அழைத்து வர மாநில அரசு ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்தது. அதன்படி, சுமார் 500 சுற்றுலாப் பயணிகள் மகாராஷ்டிராவுக்குத் திரும்பினர். முன்னதாக, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஸ்ரீநகருக்குச் சென்று சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்தார். இது தவிர, கிரிஷ் மகாஜன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாநில வீரர்களைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கதது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!