
பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் அரசு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை, தொடர்ந்து நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதையும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது என அரசு தெரிவித்துள்ளது.
தீவிரமான தேடல் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கு மத்தியில் 48 சுற்றுலா தலங்களை மூடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இந்த இடங்களை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகக்கூடிய பகுதிகளாக அடையாளம் கண்டுள்ளனர். இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான். பாதுகாப்பு சூழ்நிலை மேம்படும்போது மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரில் பால் விற்கும் இளைஞர்!
இந்த சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவது சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள உள்ளூர் பொருளாதாரத்தை கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட உள்ளூர் வணிகங்கள்ர சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்களை நடத்துபவர்கள் இதன் மூலம் பாதிக்கப்படுகிறார்கள்.
காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயல்புநிலையை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்லத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் சமீபத்திய பயண நடவடிக்கைகள் குறித்துத் தெரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த்து, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த TRF பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால் பின்னர் தங்கள் அறிக்கையை வாபஸ் பெற்றது.
இந்தத் தாக்குதல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்களை அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு நெறிமுறைகள் அதிகரித்துள்ளன.
தடுப்பூசி போட்டும் பலனில்லை; 6 வயது சிறுமி ரேபிஸ் நோய்க்கு பலி