madarsa in up: உத்தரப்பிரதேச மதரஸாக்களில் தேசிய கீதத்துடன் வகுப்புகள் தொடங்க வேண்டும்: கல்வி வாரியம் உத்தரவு

Published : Sep 29, 2022, 11:56 AM IST
madarsa in up: உத்தரப்பிரதேச மதரஸாக்களில் தேசிய கீதத்துடன் வகுப்புகள் தொடங்க வேண்டும்: கல்வி வாரியம் உத்தரவு

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு உதவி பெறும் முஸ்லிம்களின் மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன் தேசியகீதம் பாடி தொடங்கப்பட வேண்டும் என்று மதரஸா கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு உதவி பெறும் முஸ்லிம்களின் மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன் தேசியகீதம் பாடி தொடங்கப்பட வேண்டும் என்று மதரஸா கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மாநில மதரஸா கல்வி வாரியம் தனியாக அட்டவணையை மதரஸாக்களுக்கு வழங்கியுள்ளது. இதன்படி, மதரஸாக்களில் வகுப்புகள் எப்போது தொடங்கப்படவேண்டும், முடிக்கப்பட வேண்டும், வகுப்புகள் தொடங்கும்போது தேசியகீதம் மற்றும் கடவுள் வணக்கத்துடன் தொடங்கவேண்டும் போன்ற விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

கர்நாடகாவில் நாளைமுதல் நடைபயணம்.. ராகுல் காந்தியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு.

முன்னதாக மதரஸாக்களில் வகுப்புகள் காலை 9மணி முதல் பிற்பகல் 2 மணியுடன் நிறைவடையும். ஆனால் புதிய அட்டவணையின்படி, காலை 9மணிக்கு வகுப்புகள் தொடங்கி பிற்பகல் 3 மணிக்குத்தான் வகுப்புகள் முடிகிறது

கடந்த சில மாதங்களுக்கு முன், மதரஸா கல்விவாரியம் பிறப்பித்த உத்தரவில், “ ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்புகள் தொடங்கும் முன் கண்டிப்பாக தேசியகீதம் பாட வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது

மதரஸா கல்வி வாரியத்தின் பதிவாளர் ஜக்மோகன் சிங் வெளியிட்ட உத்தரவில் “ அரசின் உதவி பெறும், அங்கீகாரத்துடன் நடத்தப்படும் மதரஸாக்கள் காலை 9மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணிவரை செயல்பட வேண்டும். இறை வணக்கத்துடன், தேசிய கீதமும் பாடப்பட வேண்டும். காலை 9.20 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை வகுப்புகளும் பின்னர் நண்பகல் 12.30 மணி முதல் 3 மணிவரையும் வகுப்புகள் நடக்கவேண்டும். இதை மதரஸாக்கள் பின்பற்றவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

அக்டோபர் 1 முதல் ரயிலில் சரக்குக் கட்டணம் உயர்கிறது: காரணம் என்ன?

உ.பியில் உள்ள 78 மாவட்டங்களில் உள்ள அங்கீகாரம் பெற்ற, பெறாத மதரஸாக்கள் குறித்து  கடந்த 10ம் தேதி முதல் சர்வே செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை 25 நாட்களுக்குள் மாஜிஸ்திரேட்டிடம் வழங்கிட வேண்டும். அதை அவர் அக்டோபர் 25ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்பி வைப்பார்.

மதரஸாக்களை சர்வே செய்யும் முறைக்கு எதிராக பாஜகவுக்கும், சமாஜ்வாதிக் கட்சிக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கண்டனம் தெரிவித்திருந்தார். முஸ்லிம் சமூக மக்களை தீவிரவாதிகளாக பாஜக அரசு சித்தரிக்கிறது என்று மாயாவதி கண்டித்திருந்தார். 

இப்போது காந்தி அல்ல வத்ரா: பிரியங்கா தலைவராகலாமே! காங்கிரஸ் எம்.பி. புதிய யோசனை

ஆனால், மாநிலசிறுபான்மை நலவாரியம் அளித்த விளக்கத்தில், “ அரசின் இந்தசர்வே என்பது மதரஸாக்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா இல்லையா, மாணவர்களுக்கான வசதிகள் எவ்வாறு இருக்கின்றன, மற்றகல்வி நிறுவனங்களுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதை அறியவே சர்வேசெய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!