#StoryForGlory: டெய்லிஹன்ட், ஏஎம்ஜி மீடியா நடத்திய 'ஸ்டோரிடெல்லர்ஸ்' போட்டியில் 12 பேர் வெற்றி

By Pothy RajFirst Published Sep 29, 2022, 10:56 AM IST
Highlights

அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் மற்றும் டெய்லிஹன்ட் இணைந்து தேசிய அளவில்நடத்திய அறிவுத்திறன் போட்டியான ஸ்டோரிஃபார்குளோரி போட்டியில் 12 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதானி குழுமத்தின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் மற்றும் டெய்லிஹன்ட் இணைந்து தேசிய அளவில்நடத்திய அறிவுத்திறன் போட்டியான ஸ்டோரிஃபார்குளோரி போட்டியில் 12 பேர் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேசியஅளவில் வீடியோ மற்றும் நாளேடுகள் ஆகிய இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டியில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!சவரனுக்கு ரூ.400க்கு மேல் அதிகரிப்பு: வெள்ளி விர்ர்! நிலவரம் என்ன?

ஸ்டோரிஃபார்குளோரி திட்டத்தின் நோக்கம் என்பது, வீடியோ மற்றும் எழுத்துப்பிரிவில் கன்டென்ட் உருவாக்குபவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்துவதாகும். 

4 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சி வகுப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு விருபப்ம் தெரிவித்து வந்தன. ஆனால் அதில் தகுதிவாய்ந்த 20 விண்ணப்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேருக்கும் 8 வாரங்கள் பெல்லோஷிப் வகுப்பும், எம்ஐசிஏ நிறுவனத்தில் 2வாரங்கள் பயிற்சியும் அளிக்கப்பட்டது.அதன்பின் 20 பங்கேற்பாளர்களும் 6 வாரங்கள் முன்னணி நாளேடுகளில் தங்களின் திட்டப்பணிக்காக பயிற்சிஎடுத்தனர். இந்த பயிற்சி வகுப்பின்போது, எவ்வாறு கருத்துருவாக்கம் செய்வது, எழுதுவது, திறனை மேம்படுத்துவது ஆகியவை குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு

20 பங்கேற்பாளர்களும் தங்களின் திட்டஅறிக்கையை தாக்கல் செய்தபின் அதில் 12 பேரை மட்டும் நடுவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். 

நடுவர்கள் குழுவில் டெய்லிஹன்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா, ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் சிஇஓ மற்றும் தலைமைநிர்வாக ஆசிரியர் சஞ்சய் புகாலியா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாக இயக்குநர் ஆனந்த் கோயங்கா,பிலிம் கம்பேனியன் நிறுவனர் அனுபம் சோப்ரா, ஷி தி பீப்பிள் நிறுவனர் ஷாலிசோப்ரா, கோவான் கனெக்ஸன் நிறுவனர் நீலிஷ் மிஸ்ரா, பேக்டரி டெய்லி நிறுவனர் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் இருந்தனர்.

அக்டோபர் 1 முதல் ரயிலில் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்கிறது: காரணம் என்ன?

ஸ்டோரிஃபார்குளோரி திட்டம், பங்கேற்பாளர்கள், மக்களிடமிருந்து தனித்துவமான குரல்களை அடையாளம் கண்டு, பத்திரிகைத் துறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், ஆக்கப்பூர்வமான பெரிய ஊடக சூழலை வடிவமைக்கவும் வாய்ப்பளித்தது.

டெய்லிஹன்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா பேசுகையில் “எங்களிடம் நவீன தொழில்நுட்பம் இருப்பதால், இந்தியாவின் கதைசொல்லிகளின் துடிப்பான மற்றும் திறமையான தொகுப்பைக் கண்டறிய முடிந்தது. டிஜிட்டல் செய்திகள் மற்றும் ஊடக வெளி குறிப்பாக கதை சொல்லும் கலையில் கணிசமாக முன்னேறி வருகிறது.

ஸ்டோரிஃபார்குளோரி திட்டத்தின் மூலம் இந்தியாவின் ஊடக சூழலை வடிவமைப்பதில் எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துகிறோம் மற்றும் இந்தியாவின் வளரும் கதைசொல்லிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறோம்” எனத் தெரிவித்தார்

ஏஎம்ஜி நெட்வொர்க் லிமிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ஆசிரியர் சஞ்சய் புகாலியா கூறுகையில் “ இந்த தேசத்தில் வளமான பல்வேறு திறமைகள் கொண்ட ஏராளமான கதைசொல்லிகள் உள்ளனர்.

நாங்களும், டெய்லிஹன்ட் இணைந்து, அடுத்த தலைமுறைக்கான கதை சொல்லிகளை கண்டுபிடித்துள்ளோம். ஸ்டோரிஃபார்குளோரி திட்டம், நல்ல கருத்துருக்களை உருவாக்கவும், இந்தியாவின் சிறந்த திறமைசாலிகளை உருவாக்கவும் தளமாக அமைந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்

click me!