Madhya Pradesh Train Accident : நேருக்கு நேர் மோதிய ரயில்கள்..மத்திய பிரதேசம் அருகே பயங்கர விபத்து !!

By Raghupati R  |  First Published Apr 19, 2023, 11:49 AM IST

மத்தியப் பிரதேசத்தில் சிங்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் விபத்து ஏற்பட்டது.


மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் இன்று மோதிக்கொண்டது. 

சரக்கு ரயில்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிய வேகத்தில் ஒரு ரயிலின் என்ஜின் மற்றொரு ரயிலின் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் ஒரு எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது. இந்த ரயில் விபத்தில் இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் காயமடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tap to resize

Latest Videos

ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ரயில் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் ரயில்வே ஊழியர்கள் ஐந்து பேர் வரை காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம்

ரயில் விபத்தில் பலியான ரயில் ஓட்டுநர் பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரசாத் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்

click me!