மூன்றரை கிலோ தங்கம் கொடுத்த லாட்டரி மார்ட்டின் குடும்பம்….. பெருமாளுக்கு காணிக்கை..!

By manimegalai aFirst Published Oct 29, 2021, 9:27 AM IST
Highlights

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தரக்ள் தங்கக் கட்டிகளை காணிகையாக வழங்குவது வாடிக்கைதான் என்றாலும் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி மாஃபியா குடும்பம் தங்கக் கட்டிகளை வாரி வழங்கியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தரக்ள் தங்கக் கட்டிகளை காணிகையாக வழங்குவது வாடிக்கைதான் என்றாலும் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி மாஃபியா குடும்பம் தங்கக் கட்டிகளை வாரி வழங்கியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை மூலம் பல லட்சம் குடும்பங்களை சீரழித்த லாட்டரி மாஃபியா கும்பலின் மிக முக்கியமானவர் கோவையை சேர்ந்த சாண்டியாகோ மார்ட்டின். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுடன் நெருக்கம் காட்டி பல்லாயிரக்கணக்கில் சொத்துகளை குவித்த மார்ட்டின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதேபோல் திமுக-வுக்கு நெருக்கமானவராக அறியப்படும் மார்ட்டின், மனைவி, மற்றும் மகன்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

1990-களின் தொடக்கத்தில் லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை பலப்படுத்திய மார்ட்டின், பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக உடன் நல்லுறவை காட்டி, பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக மாறினார். 2001-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிமுக-வை நெருங்கிய மார்ட்டினுக்கு ஜெயலலிதா அரசு கைவிலங்கை மாட்டியது. லாட்டரி தொழிலுக்கு தடைவிதித்ததோடு நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை போட்டு மார்ட்டினை துரத்தியடித்தார் ஜெயலலிதா.

லாட்டரிக்கு தடைவிதிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கு அரசியல் செல்வாக்குடன் மார்ட்டின் ஏற்படுத்தி வைத்துள்ள பலமான அடித்தளமே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக அரசால் விரட்டியடிக்கப்பட்ட காலங்களில் மார்டின் சாண்டியாகோ கர்நாடாக, மேற்கு வங்கம், சிக்கிம் என இந்தியா முழுவதும் தமது லாட்டரி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். அந்த மாநிலங்களிலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுக உடன் நெருக்கமாகவே இருந்தாலும், மார்ட்டின் சம்பாதித்து வைத்துள்ள அவப்பெர்யர்களால் ஆட்சி மாற்றம் ஏற்ப்ட்டும் லாட்டரி விற்பனைக்கு தடையை நீக்க அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி மறுத்துவிட்டார்.

மார்ட்டினை போலவே அவரது மனைவி, மகன்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்துகொண்டே வருகின்றன. மார்ட்டினின் மனைவி ரோஸ் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரிவேந்தரின் கட்சியில் இணைந்தார். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் அக்கட்சியில் தம்மை இணைத்துக்கொள்ள மார்ட்டின் முயற்சித்தார். ஆனால் அது நிறைவேறாமல் போகவே, சில வருட்ங்கள் கழித்து மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜக.-வில் இணைந்தார். அவர் மீது வழக்குகள் இல்லையென்றும் சார்லஸ் மார்ட்டின் சமூகப் பணிகளை செய்ய விரும்புவதாகவும் பா.ஜ.க. விளக்கம் அளித்தது.

இதனிடையே,  2019ஆம் ஆண்டில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்காக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 119 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அப்போது நடைபெற்ற சோதனையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது. அதேபோல் மார்ட்டின் மீது ஹவாலா பணப் புகார்களும் உள்ளன. அரசியல் கட்சிகள் முதல் சிறு அமைப்புகள் வரை தமது செல்வாக்கை வளர்த்துவைத்துள்ள மார்ட்டின் குடும்பம் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் லாட்டரி விற்பனையை தொடங்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

லாட்டரி விற்பனை மீண்டும் தொடங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு அத்தாட்சியாக மார்ட்டின் குடும்பத்தினரும் செய்திகளில் அடிபட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மதுரைக்கு வந்த லாட்டரி மாஃபியா மார்ட்டின், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளியாகியது. ஆனாலும், லாட்டரி விற்பனையை தொடங்கும் திட்டம் தமிழ்நாடு அரசிடம் இல்லை என்று பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துவிட்டார். இந்தநிலையில், தான் மார்ட்டின் குடும்பத்தினர், ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.604 கிலோ எடைகொண்ட தங்கக் கட்டிகளை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் பயன்பாடற்று உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. அறநிலையத் துறைக்கு வருவாய் ஈட்டவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதகா முத்லமைச்சர் ஸ்டாலின் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தமிழ்நாட்டின் ஏழை, எளிய மக்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை லாட்டரி மூலம் சூறையாடிய மார்ட்டின் குடும்பம், அந்த காணிக்கையை கூட தமிழ்நாட்டின் ஆலயங்களுக்கு செலுத்தியிருக்கலாம். மார்ட்டின் குடும்பத்திற்கு நெருக்கமான திமுக ஆட்சியில் இருந்தும் கூட அவர்களுக்கு இதைச் செய்ய ஏன் மனம் வரவில்லை என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

click me!