நமோ ஆப்பில் 'ஜன் மேன் சர்வே' தொடங்கப்பட்டுள்ளது. இதில் மோடி அரசு மற்றும் எம்.பி.க்களின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன
பாஜக எப்போதும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியாவை, குறிப்பாக சமூக ஊடகங்களின் சக்தியை, மக்களை இணைக்கவும் ஊக்கப்படுத்தவும் பயனுள்ள கருவிகளாகப் பயன்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகித்து வருபவர். பிரதமர் எவ்வாறு நாட்டு மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்கிறார் என்பதற்கு நமோ (NaMo App) செயலி அல்லது நரேந்திர மோடி செயலி ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் குறித்த அர்த்தமுள்ள விவாதங்களில் பிரதமர் மோடி நேரடியாக குடிமக்களுடன் ஈடுபடும் தளமாக ‘நமோ ஆப்’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நமோ ஆப்பில் 'ஜன் மேன் சர்வே' - #JaManSurvey என்ற புதுமையான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
undefined
இதில் பாஜக அரசு மற்றும் எம்.பி.க்களின் பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. எம்.பி.க்கள் எவ்வாறு பணியாற்றினர்? அவர்கள் மீது மக்களுக்கு என்ன கருத்து உள்ளது? என்பதையும் நேரடியாக இந்த கணக்கெடுப்பின் மூலம் பிரதமர் மோடி அறிந்து கொள்ள முடியும்.
குடிமக்கள் எளிதில் பதிலளிக்கக்கூடிய கேள்விகளின் தொகுப்புகள் ஜன் மேன் கணக்கெடுப்பில் உள்ளன. ஆளுகை மற்றும் தலைமைத்துவத்தின் பல்வேறு அம்சங்களில் அவர்களின் மாறுபட்ட கருத்துக்களை சேகரிக்கிறது. கருத்துக்கணிப்பின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் பயனர் நட்பாகும். ஜன் மேன் கணக்கெடுப்பின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் உங்கள் பகுதி எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த தங்கள் கருத்துக்களை நேரடியாகப் பகிர்ந்துகொள்ள பயனரை அனுமதிக்கிறது. கூடுதலாக, தொகுதியில் உள்ள மற்ற பிரபலமான தலைவர்களை அடையாளம் காட்ட இது உதவுகிறது.
சதம் அடித்த எம்.பி.க்கள் இடை நீக்கம்: அமித்ஷா பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம்!
இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டு, அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. #JanManSurvey இல் பங்கேற்க, குடிமக்கள் NaMo செயலியைப் பதிவிறக்கம் செய்து, உள்நுழைந்து, தங்களின் கருத்துக்களை பதிவிட வேண்டும்.
ஜன் மேன் சர்வேயில் இடம்பெற்றுள்ள கேள்விகள்
** மோடி அரசின் ஒட்டுமொத்த செயல்திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்?
** கடந்த காலத்தை விட உங்கள் எதிர்காலம் குறித்து அதிக நம்பிக்கையுடன் உணர்கிறீர்களா?
** உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
** கொடுக்கப்பட்டுள்ள 12 துறைகளில் மத்திய அரசு அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிடவும்.
** மோடி அரசின் திட்டங்களால் நீங்கள் பயனடைந்தீர்களா?
** உங்களால் உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை எளிதில் தொடர்பு கொள்ள முடியுமா?
** உங்கள் எம்.பி.யின் முயற்சிகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
** உங்கள் எம்.பி.யின் பணி திருப்தியாக உள்ளதா?
** உங்கள் பகுதியில் உங்கள் எம்.பி பிரபலமா?
** உங்கள் பகுதியில் மிகவும் பிரபலமான மூன்று பாஜக தலைவர்களைக் குறிப்பிடவும்.
** உங்கள் தொகுதியில் கீழ்கண்டவற்றின் நிலை குறித்து உங்கள் திருப்தியை மதிப்பிடுங்கள்? இதில், சாலைகள், மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கல்வி, ரேஷன் தொடர்பான பிரச்னைகள், வேலை வாய்ப்புகள், சட்டம்-ஒழுங்கு, தூய்மை ஆகியவை குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன.
** நீங்கள் வாக்களிக்கும்போது எந்தப் பிரச்சினை உங்களுக்கு முக்கியமானதாக இருக்கும்?
** 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க விரும்புகிறீர்களா?
** வளர்ந்த இந்தியாவின் தூதுவராக நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா?