நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களின் இடைநீக்க எண்ணிக்கை 100ஐ கடந்தது
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று முன் தினம் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், அவை நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்துக்கொத்தாக கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவையில் இன்றும் உறுப்பினர் 49 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொல் திருமாவளவன், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இன்றும் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, அவை நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 33 பேர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் 95 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்களும் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் முத்ரா திட்டம்: மொத்த கடனில் 69 சதவீதம் பெண்களுக்கு - மத்திய அரசு!
மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு போராடிவரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நாடாளுமன்ற வாசலில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன. இந்த விரக்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைத்து முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.