இந்தியா வந்த ரஷ்ய பெண்ணிடம் சில்மிஷம்? பெட்ரோல் பங்க் ஊழியர் மீது வழக்கு பதிவு - பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

By Ansgar R  |  First Published Dec 19, 2023, 3:18 PM IST

Russian Woman : ஜெய்ப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரால், சமீபத்தில் ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


யூடியூப்பில் 'ஆன் ரோடு இந்தியன்' என்று அழைக்கப்படும் டெல்லியைச் சேர்ந்த Travel Vlogger ஒருவரின் தோழி தான் அந்த ரஷ்ய பெண். சம்பவம் நடந்த அன்று, அந்த நபருடன் தான் அந்த ரஷ்ய பெண் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரது ஆண் நண்பர் தனது இருசக்கர வாகனத்திற்கு சென்றபோது தான் பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அந்த சம்பவத்தின் மொத்த வீடியோவும், அந்த ஆண் நண்பரின் ஹெல்மட்டில் இருந்த கமெராவில் பதிவாகியுள்ளது. அந்த நபர் நடந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெளியான வீடியோவில் அந்த நபர் அந்த பணியாளரிடம் அவர்களின் மேலாளரை வரச்சொல்லுமாறு கேட்கிறார், மேலும் அந்தத் ஊழியர் தனது நண்பரான விக்டோரியாவை பலமுறை அவரின் விருப்பமின்றி தொட்டதாகக் கூறுகிறார். 

Latest Videos

undefined

பிரதமர் முத்ரா திட்டம்: மொத்த கடனில் 69 சதவீதம் பெண்களுக்கு - மத்திய அரசு!

அந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியும், முதல் இரண்டு முறை, அவர் தொட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும். ஆனால் மூன்றாவது முறை, அவர் தகாத முறையில் அவளைத் தொடுகிறார் என்பது அவருக்கு நன்றாக தெரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். உடனே மன்னிப்பு கேட்ட ஊழியரிடம் "மன்னிப்பு எல்லாவற்றையும் சரிசெய்ய முடியுமா?" என்று அந்த பெண்ணின் ஆண் நண்பர் கேட்டுள்ளார். 

புதிய வகை கொரோனா மிகவும் கொடியதா? கர்நாடகா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏன்? ஏசியாநெட் சிறப்பு நேர்காணல்!!

Is Still safe for foreign women tourists and travellers?
Recently my Russian Traveler friend faced serious issue in Jaipur where she was touched by a fuel station staff 3 times. Police came to help. pic.twitter.com/KFA8waa8gJ

— OnRoad Indian (@onroadindian)

இதற்கிடையில் அந்த ஊழியர் அந்த பெண்ணை வேண்டுமென்றே தொடவில்லை என்று கூறி, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு விக்டோரியா என்ற அந்த பெண் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். சிறிது நேரம் கழித்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள் அவர்களிடம் அந்த நபர் அனைத்தையும் கூற அந்த போலீசார் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் நடந்தது கடந்த நவம்பர் மாதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!