எதிர்பாராத ட்விஸ்ட்.. 200+ இடங்கள்.. இதனால் இந்தியா கூட்டணிக்கு என்ன பலன் கிடைக்கும்?

By Ramya s  |  First Published Jun 4, 2024, 1:38 PM IST

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி கூட்டணி 286 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 236 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது


543 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக கூட்டணி கூட்டணி 286 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 236 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு தற்போதுள்ள 119 இடங்களை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். 200 இடங்களுக்கு மேலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. இது இந்தியா கூட்டணிக்கு தார்மீக ஊக்கமளிப்பது மட்டுமல்ல, கூட்டணிக்கு பல நன்மைகளைத் தரும். 

நாடாளுமன்றத்தில் அரசை எதிர்த்து வலுவாக குரல் எழுப்ப முடியும். மேலும் காங்கிரஸின் லோக்சபா தலைவர் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை மேற்பார்வையிடும் முக்கிய அமைப்புகளான பாராளுமன்றக் குழுக்களின் தலைவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக் கொண்டுவரும். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து பேசிய போது, “இது அரசியல் தோல்வி மட்டுமல்ல, பிரதமருக்கு தார்மீக தோல்வியாகத் தெரிகிறது.” என்று தெரிவித்தார்.

Latest Videos

undefined

Loksabha election result 2024 நீயா? நானா? வட இந்தியா, மத்திய இந்தியா முன்னிலை நிலவரங்கள் என்ன?

400 இடங்களில் வெற்றி என்ற முழக்கத்துடன் பாஜக இந்த தேர்தலை சந்தித்தது. ஆனால் தற்போது 300 இடங்களை தாண்டுவதே பாஜக கூட்டணிக்கு சிக்கலாக உள்ளது. இது அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தடையாக இருக்கலாம். ஏனெனில் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் பெரும்பான்மையான மாநிலங்களின் ஆதரவு தேவை.

புதிய மக்களவையில் பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வரத் தவறினால், அது பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்தையும் கேள்விக்குறியாக்கி விடும்.. காங்கிரஸ் ஆர்வலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான முகமது கான் பேசிய போது “ஒரே நாடு, ஒரு தேர்தல் திட்டத்திற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும், ஏனெனில் தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற அந்த மாநிலங்களின் பதவிக் காலத்தின் நடுவே கூட இல்லாத பல அரசாங்கங்களை நீங்கள் கலைக்க வேண்டும். எனவே பாஜக அரசுக்கு இது சிக்கலாக மாறும்” என்று தெரிவித்தார்.

மற்றொரு அரசியலமைப்பு நிபுணரும் வழக்கறிஞருமான உபமன்யு ஹசாரிகா கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தில் பெரிய அளவிலான திருத்தங்களைச் செய்வது அரசாங்கத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வரும் தேர்தல் முடிவுகள்?

கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத எதிர்க்கட்சித் தலைவர் பதவி, காங்கிரசுக்கு கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இரண்டு நாடாளுமன்றக் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைக்கும். காங்கிரஸ் அதிக தலைவர் பதவியைப் பெறும். மேலும் அரசாங்கத்தின் மீது அதிக மேற்பார்வை அதிகாரமும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்.

click me!