வெடித்த அதானி விவகாரம்: உடும்புபிடியில் எதிர்க்கட்சிகள்! நாடாளுமன்றம் நாள்முழுவதும் ஒத்திவைப்பு

By Pothy Raj  |  First Published Feb 3, 2023, 3:33 PM IST

Lok Sabha adjourned :பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்தமுறைகேடுகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


Lok Sabha adjourned :பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்தமுறைகேடுகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு போன்றவற்றை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த வாரம் வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. 

Tap to resize

Latest Videos

இப்படியா ஷாக் கொடுப்பது!அதானி குழுமம் நிதிநிலை குறித்து மூடிஸ் நிறுவனம் ஆய்வு

இந்த அறிக்கைக்குப்பின், அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு பங்குச்சந்தையில் மளமளவெனச் சரிந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் அதானி குழுமத்துக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதானி குழுமம் , அதானி என்டர்பிரைசர்ஸ் எப்பிஓ வெளியீட்டையும் ரத்து செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க உள்ளது. அதானி குழும பங்குச்சந்தை மோசடியை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டு கடந்த இரு நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அதானி நிலைமை இப்படியா ஆகணும்! பாதி சொத்தைக் காணோம்! டாப்-20யிலிருந்து துடைத்து எறியப்பட்டார்

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடி தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் அல்லது, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றம் இன்று தொடங்கியதும் மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி விவகாரத்தை எழுப்பி, விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர். 

ஆனால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் போராட்டம் செய்வதைவிடுத்து மற்ற அலுவல்களை விவாதிக்க வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவையை நடத்த முடியவில்லை. இதனால் அவையை பிற்பகல் 2 மணிவரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தா். 
அதன்பின் பிற்பகலில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழுமத்தின் விவகாரத்தை எழுப்பி அவையில் விவாதிக்க அனுமதி கோரினார்கள். 

அதானி குழுமப் பத்திரங்கள் ‘ஜீரோவா’ மதிப்பில்லையா? கிரெடிட் சூசி வாங்குவதை நிறுத்தியது

அப்போது அவையை நடத்திய ராஜேந்திர அகர்வால், “ எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியைக் கைவிட்டு இருக்கையில் அமருமாறும், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டு, அமளியில் ஈடுபட்டனர். அதானி குழும மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து, மக்களவையை இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்

click me!