கடந்த மே 10ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கூறிய கர்நாடகாவை சேர்ந்த இளம் ஜோதிடர், 2024 லோக்சபா தேர்தலுக்கு பின், நாட்டின் பிரதமராக பெண் ஒருவர் வருவார் என கணித்துள்ளார்.
திப்டூர் தாலுக்காவில் உள்ள நோனாவினகெரேயில் உள்ள சனி கோவிலின் தர்மாதிகாரி டாக்டர் யஷ்வந்த் ‘ஜி உருஜி’ அவர்கள், சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது எதிர்வரும் 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்று கணித்துள்ளதாக கூறியுள்ளார்.
Fenugreek: தோஷம் நீங்குவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்; செஞ்சுதான் பாருங்களேன்!!
இதனால் ஒரு பெண் பிரதமருடன், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும்” என்றும் அவர் கூறினார். அவர் தனது கணிப்பு, நட்சத்திரங்களின் நிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார். 2024 பிப்ரவரியில் மகா சிவராத்திரி விழாவுக்குப் பிறகு இந்தியாவில் தலைமை மாற்றம் ஏற்படும் என்றும். பண்டிகைக்கு முன் தேர்தல் நடத்தப்பட்டால், மோடி மீண்டும் பிரதமராகி விடுவார் என்றும் அவர் கண்டித்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, AICC முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகளும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்கா காந்தி ஆகியோரில் யார் பிரதமராக வருவார்கள் என்ற கேள்விக்கு, அதுகுறித்து பிப்ரவரிக்குப் பிறகு தான் கணிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த கணிப்பு காங்கிரஸின் காதுகளுக்கு இனிப்பான செய்தியாக வந்துள்ளதால், அக்கட்சியின் அனுதாபிகள் டாக்டர் யஷ்வந்தின் வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.