இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) விதிகளின்படி, ஒரு நபர் தனது ஒரு ஆதார் அட்டையில், சரியாக ஒன்பது சிம் கார்டுகளை இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் பகிர்வு ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்ட இந்த காலகட்டத்தில், மோசடிகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. சைபர் குற்றவாளிகள், சில சமயங்களில் இணைய வல்லுனர்களிடம் இருந்து கூட நைசாக அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை திருடிச்செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்திய வழக்கு ஒன்றில், ஆந்திரப் பிரதேச போலீசார் அளித்த தகவலின்படி 658 சிம் கார்டுகள் ஒரு ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே அந்த சிம் கார்டுகளை ரத்து செய்யுமாறு அந்தந்த சேவை வழங்குநர்களுக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்புத் துறையின் (DoT) விதிகளின்படி, ஒரு நபர் ஒரு ஆதார் அட்டையில் ஒன்பது சிம் கார்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. ஒரு ஆதார் எண்ணைக் கொடுத்து பல இணைப்புகளை எடுக்கக்கூடிய பெரிய குடும்பங்களுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிபிடத்தக்கது.
undefined
நீதியே முக்கியம்.. இனி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இருக்காது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
இருப்பினும், இந்த விதி தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால்தான் உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சரிபார்க்க DoT இணையதளம் உள்ளது.
சரி அதை எப்படி சரிபார்ப்பது?
sancharsaathi.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்த பிறகு, ஒரு பயனர் இரண்டு இணைப்புகளைப் பார்க்கமுடியும். ஒன்று உங்கள் தொலைந்த/திருடப்பட்ட மொபைல் எண்ணை பிளாக் செய்வது மற்றும் உங்கள் மொபைல் இணைப்புகளை பற்றி அறிந்துகொள்வது.
உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள எண்கள் குறித்து தெரிந்துகொள்ள, உங்கள் 10 இலக்க மொபில் எண்ணை நீங்கள் பதிவிட்டதும், அந்த எண்ணிற்கு OTP வரும்.
அந்த OTPயை நீங்கள் பதிவு செய்ததும், புதிதாக திறக்கும் பக்கத்தில் பயனரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களின் விவரங்கள் இருக்கும்.
மேலும் அதில் உள்ள எண்கள் உங்களுடையது அல்ல என்றால் அதை நீங்கள் நீக்கமும் செய்துகொள்ளமுடியும்.